கிறிஸ்துமஸ் என்பது மன்னிப்பு, அன்பு, கருணை ஆகியவற்றை நினைவுப்படுத்துவதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சியின் பண்டிகை என்றும், இந்த நாள் இரக்கம், மன்னிப்பு, அன்பு, கருணை ஆகியவற்றை நினைவுப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்கு வழிகாட்டும் நட்சத்திரங்களாக இந்த நெறிகளை நாம் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்றும் ஆளுநர் அறிவுரை வழங்கியுள்ளார். இந்த திருவிழா மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.