தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் சண்முகம்!

தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் சண்முகம்!

தமிழக அரசின் ஆலோசகர் சண்முகம்

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைய உள்ள நிலையில், சண்முகம் தனது ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழக அரசின் ஆலோசகர் பதவியை சண்முகம் ராஜினாமா செய்துள்ளார்.

  முன்னாள் தலைமை செயலாளரான சண்முகம் ஐ.ஏ.எஸ் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததும், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார்.  இந்நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில், தனது ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்வதாக சண்முகம் தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து, அவரது ராஜினாமா கடிதத்தை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சனிடம் வழங்கியுள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதிவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

  தமிழக அரசின் நிதித்துறையில் கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் சண்முகம். இவர் அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசின் 46வது தலைமை செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றார். அவர் ஓய்வுபெற்ற பின்பு, தமிழக அரசின் ஆலோசகராக கடந்த ஜன.31ம் தேதி நியமிக்கப்பட்டார்.
  Published by:Esakki Raja
  First published: