ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

5 வருட பாசம்.. பாதை மாறி வந்த கழுகை விமானத்தில் அனுப்பிய தமிழக வனத்துறை.. பிரியாவிடை கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்!

5 வருட பாசம்.. பாதை மாறி வந்த கழுகை விமானத்தில் அனுப்பிய தமிழக வனத்துறை.. பிரியாவிடை கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்!

சினேரியஸ் கழுகு

சினேரியஸ் கழுகு

அறிய வகை கழுகு ஒன்று ஒக்கி புயலில் சிக்கி கூண்டில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் வாழ்விடத்திலேயே அனுப்பி வைக்க வனத்துறை ஏற்பாடு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

ஒக்கி புயலின் போது பாதை மாறி வந்த "சினேரியஸ் கழுகு" கடந்த 5 வருடங்களாகக் கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரி கோட்டையில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை வனப் பகுதியில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கழுகை விமானம் மூலம் கொண்டு சென்று அதனின் இருப்பிடமான வனப்பகுதியில் விட வனத்துறையினர் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரி கோட்டையில் அமைந்துள்ளது பல்லுயிரின பூங்கா. தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் மான்கள், மயில்கள், வண்ணத்துப் பூச்சிகள், குரங்கு எனப் பல வகையான வன விலங்குகளும், அரிய வகை பூச்சிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் அரிய வகையைச் சார்ந்த "சினேரியஸ் கழுகு" எனப்படும் பிணம் தின்னி கழுகு ஒன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. மத்திய ஆசியப் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இந்த கழுகு இந்தியாவில் அரிய வகை கழுகாகவே வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

கழுகு

சுமார் மூன்றரை அடி உயரம், பெரிய கண்கள், கூரான நுனி உடைய வளைந்த அலகு, கால் விரல்களில் கூரான நகம், பறக்கும் போது சிறகுகளின் அகலம் 6 அடி மற்றும் 14 கிலோ வரை எடை என மெகா சைஸ்யில் காணப்படும் இந்த கழுகுகள் விண்ணுயர பறந்து தனது கழுகு பார்வையால் விலங்குகள், மீன்களை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும். இந்தியாவைப் பொறுத்தவரை ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

கோவிலில் ஆர்த்தி எடுத்துக் கொண்டு சென்ற காட்சி

இந்த மெகா சைஸ் கழுகானது 2017 இல் ஏற்பட்ட ஒக்கி புயலின் போது பாதை மாறி தமிழகத்தில் நுழைந்தது. கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் உடலில் காயங்களுடன் பறக்க முடியாமல் கிடந்த நிலையில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் கழுகை மீட்டனர்.

அதனைத்தொடர்ந்து வனத்துறையினர் கழுகை உதயகிரி கோட்டைக்குக் கொண்டு சென்று ஒக்கி புயலின் அடையாளமாக "ஓகி" என்று பெயர் சூட்டி கூண்டில் அடைத்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்துப் பராமரித்து வந்தனர். தற்போது கழுகு குணமடைந்து உள்ளது.

வனத்துறையினர் ஐந்து ஆண்டுகளாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுமார் ஒன்றரை கிலோ வரை மாமிசமும் கொடுத்துப் பராமரித்து வந்தனர்.

கழுகு

இதற்கிடையில் அரிய வகை கழுகைக் கூண்டில் அடைத்து சிறைப் படுத்தக்கூடாது என்றும் அதை உடனடியாக விடுவித்து சொந்த வாழ்விடமான ராஜஸ்தான் வனப்பகுதியில் விட வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனையடுத்து முழு உடல் தகுதி பெற்ற அந்த கழுகைச் சொந்த வாழ்விடமான ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதற்காகக் கடந்த 5-மாதங்களாக வனத்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அந்த கழுகைச் சொந்த வாழ்விடத்திற்கு எடுத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

இதுகுறித்து குமரி மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா கூறுகையில், இந்த கழுகைச் சாலை மார்க்கமாகவோ ரயில் மூலமாகவோ ராஜஸ்தான் எடுத்துச் செல்ல பல நாட்கள் ஆகும். அதனால் மன அழுத்தம் ஏற்படும் என்பதால் மருத்துவக் குழு உள்ளிட்ட வல்லுனர் குழு மூலம் ஆலோசித்து விமானம் மூலம் எடுத்துச் செல்ல முடிவெடுத்ததாகத் தெரிவித்தார்.

மேலும் இதற்காக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read : குஷ்பு, காயத்ரி ரகுராம் குறித்து தரக்குறைவாக பேசிய விவகாரம்: திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

நேற்று ஞாயிற்றுக்கிழமை உதயகிரி கோட்டையில் இருந்து ஏசி கார் மூலம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்குக் கழுகு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து வரும் 3-ம் தேதி மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழு அந்த கழுகை ஏர் இந்தியா விமானம் மூலம் ராஜஸ்தான் கொண்டு சென்று ஜோத்பூர் வனப்பகுதியில் விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கழுகின் செயல்பாடுகளை கண்காணிக்கச் சிறகில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்ட கழுகுக்கு உயிரியல் பூங்கா ஊழியர்கள் பிரியாவிடை கொடுத்ததோடு எடுத்துச் செல்லும் காருக்கு கற்பூரம் ஏற்றி வழியனுப்பி வைத்தனர்.

Published by:Janvi
First published:

Tags: Forest Department, Kanniyakumari