முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தொடரும் டீசல் விலை உயர்வு: மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தொடரும் டீசல் விலை உயர்வு: மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் டீசல் விலையை குறைக்க கோரி நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில்  64 கிராம மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களும் டீசல் விலையை குறைத்தல், மானிய டீசல் அளவை உயர்த்துதல், இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் இலங்கை வசம் உள்ள படகுகளை விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். போராட்டம் காரணமாக சுமார் ஒரு லட்சம் மீனவர்களும், 50,000 மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.

தொடர்ந்து வரும் 8-ம் தேதி ராமநாதபுர மாவட்ட மீனவர்கள் சார்பில் ராமநாதபுரத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Boats, Diesel Price, Karaikal, Nagai, Pudhukottai, Work Strike