TN Budget 2021 : ஆண்டுதோறும் 50 நீர் பாசன குளங்களை மேம்படுத்த சிறப்பு திட்டம் - நிதியமைச்சர் அறிவிப்பு

மேட்டூர் அணை

பாசனத்திற்காக மொத்தம் 6607.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    2021-22 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 50 குறு நீர் பாசன குளங்களை தரப்படுத்தலுக்கான சிறப்பு திட்டம் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

    “பாசனத்திற்காக மொத்தம் 6607.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கல்லணை கால்வாய் புதுப்பித்தல், விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இருந்து 2639.15 கோடி நிதி உதவி பெறப்பட்டுள்ளது.

    கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைவாக செயல்படுத்த, ஒன்றிய அரசிடம் நீர்வளத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

    மேட்டூர் அமராவதி வைகை பேச்சிப்பாறை போன்ற முக்கிய அணைகளில் நீர் தேக்க கொள்ளளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த தேவையான திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.” என்று கூறினார்.

    Must Read : பட்ஜெட் குறித்த உடனுக்குடன் அப்டேட்டுக்கு இங்கே கிளிக் செய்க

    மேலும், “ உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு 8437.57 கோடி ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், தேவையுள்ள இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகளை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கு ஒன்று ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published: