தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் இப்ப டாக் ஆஃப் தி டவுன். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நம்ம பிடிஆர் பேசுன பேச்ச நார்த் இந்தியன் யூத்கள் சமூகவலைதளத்தில் தேடிக்கிட்டிருக்காங்கன்னா பாத்துக்கோங்க. கோவா மினிஸ்டரே கோவிச்சுக்கிட்டு சண்டை போட ஆரம்பிச்சுட்டார். உள்ளூர் பா.ஜ.க-வினரை கமெண்ட்..ப்ளாக் என மனுசன் துவம்சம் செய்து வருகிறார். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு இருக்கு பிடிஆர் பேச்சு.. புள்ளி விவரங்களை கையில வெச்சுக்கிட்டு பேசுறதால பலபேர புறமுதுகு காட்டி ஓடவிடரார்.
பிடிஆர் பேசுற புள்ளிவிவரங்களை நோட்ஸ் எடுக்காம மனுஷன் போட்டு இருக்கிற மாஸ்க்-கை டார்க்கெட் பண்ணியிருக்காங்க சிலர். அதோட விட்டா பரவாயில்ல நேரா ட்விட்டர்ல அவரையே டேக் செய்து. பிடிஆர் சார்.. மாஸ்க் எங்க வாங்குறாருன்னு தெரிஞ்சா நாமலும் நாலு வாங்கி வைக்கலாம் கேட்டு இருக்காங்க..
நீங்க எந்த கேள்வி கேட்டாலும் என்கிட்ட பதில் இருக்கும் அதான் இந்த பிடிஆர் என்கிற ரேஞ்சில்.. எல்லாமே ஹோம்மேட் தான்.. தி ஆர்ட்-ன்னு அவரு யூஸ் பண்ற மாஸ்க்-க்கும், தி ஆர்டிஸ்ட்-ன்னு அவருடைய மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதில் அவர் போட்ட இன்னொரு கேப்ஷனுக்கு ட்விட்டரில் ரெஸ்பான்ஸ் அள்ளுது.
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) June 5, 2021
ஆல்ட்ரேஷன் என்று பதிவிட்டு கிழிந்த மாஸ்கையும் எடிட்டர்-ன்னு போட்டு அவர் வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாயின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மிகவும் பவ்யமாக நிற்கும் அவரது செல்லப்பிராணியின் போஸ்ட்-க்கு லைக்குகள் அள்ளுது. அதில் ஒருவர் செய்துள்ள கமெண்டில்.” நீங்கள் போட்டிருக்கும் போஸ்ட்டில் உள்ள செல்லப்பிராணியை பார்த்ததும், எனக்கு இந்த கமெண்ட் தான் நியாபகத்து வருது... பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒன்னும் தெரியாதவனை போல முழிக்கிறதை பாரு” எனப் பதிவிட்டுள்ளார். திரும்பிய பக்கமெல்லாம் கோல் போடுறாரு பிடிஆர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.