சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கடுமையாக விலை சரிந்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவிடாமல் எந்த சக்தி தடுக்கிறது? என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியத்ற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
சென்னையில் கடந்த 200 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்த பிறகும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது ஏன் என தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க : மாண்டஸ் புயல் : தமிழகத்தில் டிசம்பர் 8 முதல் பலத்த காற்றுவீசும்.. 2 நாட்கள் அதிகனமழை - வானிலை மையம் அலெர்ட்
இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும், பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பெட்ரோல் டீசல் விலை கச்சா எண்ணெய் விலையை சார்ந்து இல்லாமல், இங்கு வேரெதும் ‘சக்திகளை’ சார்ந்து இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதோர் எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? பெட்ரோல் லிட்டருக்கு ₹2 மற்றும் டீசல் லிட்டருக்கு ₹4 குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும். ஆனால், விலையை குறைக்கவிடாமல் தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி தடுத்து வருகிறது!” என பதிலளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister Palanivel Thiagarajan, Petrol Diesel Price, Petrol Diesel Price hike