• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரப்பர் பால் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை

ரப்பர் பால் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை

ரப்பர் மரத்தில் இருந்து வரும் பால்

ரப்பர் மரத்தில் இருந்து வரும் பால்

கேரளா அரசு ரப்பர் தொழிலை ஊக்குவிப்பது போல், தமிழக அரசும் ரப்பர் விவசாயத்தை ஊக்குவித்து உதவ வேண்டும் என்று தமிழக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ரப்பர்  பால் விலை குறைந்துள்ளதால், தமிழக  - கேரளா எல்லையான  புளியரை பகுதியில் இதனை நம்பி வாழும் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள புளியரை கிராமம், அதனை சுற்றியுள்ள கொடைகல், மொட்டை மேடு, குப்பூ, கருவாய் விளை, உள்ளிட்ட பகுதியில் 300 ஏக்கருக்கு மேலாக ரப்பர் தோட்டம் அமைத்து விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஒரு லிட்டர் ரப்பர் பாலுக்கு ரூபாய் 130 முதல் 150 வரை கிடைத்தாகவும், தற்போது 18 முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அதள பாதாளத்தில் விலை சரிந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ரப்பர் பால் வெட்டும் தொழிலை நிறுத்தியதால் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உள்ளதாக கூறுகின்றனர்.

புளியரை கிராமத்தில் உள்ள ரப்பர் மரத்தில் எடுக்கப்படும் ரப்பர் பால்


ரப்பர் பாலுக்கு போதிய விலை கிடைக்காதது குறித்து,  பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறைக்கும் பல முறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கேரளா அரசு ரப்பர் தொழிலை ஊக்குவிப்பது போல், தமிழக அரசும் தங்களுக்கு உதவ வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கேரளாவைப் போல், இத்தொழிலை நம்பியுள்ள தமிழக விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரப்பர் விவசாயிகளின் கோரிக்கையாகும்.

Also Watch:
தேர்தல் விநோதங்கள்:  திருமணக் கோலத்தில் வாக்களிக்க வந்த தம்பதி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: