தமிழகத்தில் ஏற்கனவே அமலில் இருந்து வரும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூலை மாதம் 5ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் நோய் பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்ததையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அது ஒவ்வொரு வாரமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஜூன் 28ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 5ம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நோய் பரவலை கருத்தில் கொண்டு கடந்த வாரம் 3 வகையாக மாவட்டங்கள் பிரித்து அதற்கேற்றவாறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுப் போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட சில பயணங்களுக்காக இ-பாஸ் மற்றும் இ-பதிவு தேவை எனவும் அதற்கான வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Also Read: Twitter Vs மத்திய அரசு: ஐடி துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையே சீண்டிய ட்விட்டர்!
மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், ஏற்கனவே மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வகை 1 - (11 மாவட்டங்கள்)
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்
வகை 2 - (23 மாவட்டங்கள்)
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.
வகை 3 - (4 மாவட்டங்கள்)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வகை-1ல் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை-2, 3-ல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிக்கவும் இ-பாஸ் பெறவேண்டும். திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: E Pass, Lockdown, MK Stalin, Vehicle Registration