• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை: தமிழக அரசு தகவல்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை: தமிழக அரசு தகவல்

வேலைக்கு காத்திருப்போர் எண்ணிக்கை

வேலைக்கு காத்திருப்போர் எண்ணிக்கை

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 72 லட்சத்து 20 ஆயிரத்து 454 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 72 லட்சத்து 20 ஆயிரத்து 454 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தமிழக அரசு வேலைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம்  தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதேபோல், ஒருசில பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் நியமிக்கப்படுகின்றனர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் வேலைவாய்ப்பு, பயிற்சிகள் போன்றவை வழங்கப்படுகிறது. இதற்கு பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.

    தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 72 லட்சத்து 20 ஆயிரத்து 454 நபர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதில் 33 லட்சத்து 81 ஆயிரத்து 966 ஆண்களும், 38 லட்சத்து 38 ஆயிரத்து 264 பெண்கள், 224 மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்துள்ளனர். அதேப்போல், 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 26 லட்சத்து 88 ஆயிரத்து 055 நபர்கள் என்றும், 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 13 லட்சத்து 10 ஆயிரத்து 976 நபர்களும், 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11387 நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அங்கன்வாடி, சத்துணவு திட்ட பணிகளில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு : அரசாணை


    அதேப்போல் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 1,38,270 நபர்கள் பதிவு செய்து காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 56 ஆயிரத்து 086 நபர்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 65 ஆயிரத்து 699 நபர்களும் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க: கனமழையால் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: