முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பல மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்க வேண்டுமா? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

பல மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்க வேண்டுமா? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

வீடுகளில் பல மின் இணைப்புகள் இருந்தாலும் ஒன்றாக இணைக்க அறிவுறுத்தவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஒரு குடியிருப்பில் இரண்டுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் ஒரே மின் இணைப்பு எண்ணாக மாற்ற வேண்டும் என எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை. எத்தனை மின் இணைப்பு இருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார்.  அப்போது கோடை காலத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி , ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்ற அறிவுறுத்தவில்லை தன்னிச்சையாக சுற்றறிக்கை அனுப்பிய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டர்.

மேலும் வீடு ஒன்றுக்கு எத்தனை மின் இணைப்புகள் பெற்றிருந்தாலும் இலவச 100 யூனிட் மின்சாரம் தொடரும் என தெரிவித்தார்.

24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் விவசாயிகளுக்கு தரக்கோரி எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்த நிலையில், அதிமுக ஆட்சியில் 9 முதல் 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் தரப்பட்டதாக கூறினார். திமுக ஆட்சியில் 18 மணிநேரத்துக்கு விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: Senthil Balaji, TNEB