இன்று இரவு 9 மணிக்கு ஒரே நேரத்தில் மின்விளக்குகளை அணைத்தால் மின்கட்டமைப்பு பாதிக்குமா?

இன்று இரவு 9 மணிக்கு ஒரே நேரத்தில் மின்விளக்குகளை அணைத்தால் மின்கட்டமைப்பு பாதிக்குமா?
  • Share this:
இன்று இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை தவிர்ந்தது எஞ்சிய மின் உபகரணங்களை வழக்கம் போல் இயக்கத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

ஞாயிறு இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை 9 நிமிடங்கள் அணைத்து விட்டு, அகல்விளக்கு ஏற்றவும், மாடியில் இருந்து மொபைல் டார்ச்-சை ஒளிரச் செய்யவும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, தமிழக முதலமைச்சரின் அறிவுரையை ஏற்று, அந்த தருணத்தில் மின் கட்டமைப்பில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


எனவே, இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மின்விளக்கை தவிர்த்து, குளிர்சாதன பெட்டி, ஏ.சி. உள்ளிட்ட மின் உபகரணங்களை செயல்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Also see...










சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading