வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம்

வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்
  • News18
  • Last Updated: April 18, 2019, 2:26 PM IST
  • Share this:
வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் ஏ.சி.சண்முகம் கண்ணீர் விட்டு அழுதார்.

அதிமுக கூட்டணியில் வேலூர் தொகுதி வேட்பாளராக களமிறங்கினார் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம். அவரை எதிர்த்து திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அத்தொகுதியில் திமுக உறுப்பினருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறையினரின் சோதனையில் ரூ.11 கோடிக்கு மேல் பணம் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த ஆணையை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார் ஏ.சி.சண்முகம். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மே 19-ம் தேதியன்று 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் போது வேலூர் மக்களவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய ஏ.சி.சண்முகம், இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் தேர்தல் நடைபெறுகின்றன. ஆனால் வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

வேலூரில் எங்கள் வேட்பாளர் செலவு செய்த தொகையை திருப்பித் தருவார்களா?- வாக்களித்தபின் சீமான் பேட்டிவீடியோ பார்க்க: எல்லாரும் வாங்கிட்டாங்க! எங்களுக்கு பணம் கிடைக்கல - தூத்துக்குடி வாக்காளர்


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்