TN Election Result 2021| தமிழக தேர்தல் முடிவுகள்; பின்னடைவைச் சந்திக்கும் நட்சத்திர வேட்பாளர்கள்!

TN Election Result 2021| தமிழக தேர்தல் முடிவுகள்; பின்னடைவைச் சந்திக்கும் நட்சத்திர வேட்பாளர்கள்!

நட்சத்திர வேட்பாளர்கள்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 23,909 வாக்குகள் பெற்று, எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனை விட 3236 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தின் 16வது சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி காலை முதல் விருவிருப்பாக நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தமிழகத்தில் 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன. அதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி விருவிருப்பாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், நட்சத்திர வேட்பாளர்கள் முன்னிலை மற்றும் பின்னடைவு நிலவர விவரம் வருமாறு,

    எடப்பாடி தொகுதியில் 10வது சுற்று முடிவில், எடப்பாடி பழனிசாமி 56,252 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமாரை விட 35,449 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    கொளத்தூர் தொகுதியில், திமுக தலைவர் மு..க.ஸ்டாலின் 26,764 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    கோவை தெற்கு தொகுதியில், 8வது சுற்று முடிவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 17,030 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானிதி சீனிவாசனை விட 2,912 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    காரைக்குடி தொகுதியில் 8வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா 22,917 வாக்குகள் பெற்று, எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை விட 10681 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

    ஆவடி தொகுதியில் 11வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் மாஃபா பாண்டியராஜன் 29,474 வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் நாசரை விட 20403 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

    ராஜபாளையம் தொகுதியில், 9வது சுற்று முடிவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 23,909 வாக்குகள் பெற்று, எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனை விட 3236 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

    காட்பாடி தொகுயில் 11வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 36,056 வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராமுவை விட 5169 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

    விருத்தாசலம் தொகுதியில் 7வது சுற்று முடிவில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் 9041 வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ், பாமகவை விட பின்னடைவை சந்தித்து 3வது இடத்தில் உள்ளார்.

    கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் 10வது சுற்று முடிவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 47,074 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். வேலுமணியை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி 22107 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

    திருவொற்றியூர் தொகுதியில் 10வது சுற்று முடிவில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 15,184 வாக்குகள் பெற்று, எதிர்த்து போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளர்களை விட பின்னடைவை சந்தித்து 3வது இடத்தில் உள்ளார்.

    மதுரவாயல் தொகுதியில் 4வது சுற்று முடிவில், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்ம பிரியா 5166 வாக்குகள் மற்றுமே பெற்று திமுக, அதிமுக வேட்பாளர்களை விட பின்னடைவை சந்தித்து 3வது இடத்தில் உள்ளார்.

    கோவில்பட்டி தொகுதியில் 9வது சுற்று முடிவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ 26,459 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 23503 வாக்குகள் பெற்று 2956 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published: