TN Election Results 2021: விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

TN Election Results 2021: விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் தி.மு.க தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தற்போது நிலையில், தி.மு.க கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது. இந்தநிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் 30 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. ஆட்சி அமைக்க இருப்பது தி.மு.கதான். வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள நமது நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மிக மிக விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். பெரிய குளறுபடிகள் எதுவும் செய்துவிட முடியாது என்றாலும் எங்காவது ஓர் அதிகாரி அதைச் செய்துவிடக் கூடும் என்பதால் அதிகக் கவனம் அவசியம்.

    முழு வாக்கு எண்ணிக்கை முடியும்வரை மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது. எதிர் அணியினர் வாக்கு எண்ணிக்கையினை சீர் குலைக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

    வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் உடனடியாகத் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். வெற்றிச் சான்றிதழ் பெறும்வரைக்கும் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறக் கூடாது.

    தொண்டர்கள் அனைவரும் வெற்றிக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும். பெருந்தொற்று பரவக் காரணம் ஆகிவிடக் கூடாது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் புதியதோர் அத்தியாயம் தொடங்க இருக்கிறது. நம்மையும் பாதுகாத்து, நாட்டையும் பாதுகாப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published: