தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மதியம் 12 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 130+ தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 98 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் நோக்கில் களமிறங்கியுள்ள அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன, இதில் அதிமுக மட்டும் 84 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 7 முதல் 9 தொகுதிகளில் மாறி மாறி முன்னிலை வகிக்கிறது. 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
பாமகவை பொறுத்தவரை தற்போது 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன்படி பென்னாகரம் தொகுதியில் பாமகவின் தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகிக்கிறார்.
தருமபுரியில் வெங்கடேஸ்வரன், திருப்பத்தூர் தொகுதியில் டி.கே.ராஜா, மயிலம் தொகுதியில் சிவகுமார், நெய்வேலி தொகுதியில் ஜெகன், ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமகவின் செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு மற்றும் சேலம் மேற்கு தொகுதியில் அருள் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மேட்டூர் தொகுதியில் பாமக வேட்பாளர் சதாசிவம், திமுக வேட்பாளர் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு பலமான போட்டியை அளித்து வருகிறார். அங்கு முன்னிலை நிலவரம் ஒவ்வொரு சுற்றுக்கும் மாறி மாறி வருகிறது.
கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கிய அதிமுக: 100+ இடங்களில் முன்னிலை!
1991 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் பாமக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை...
1991 - 1 (ஒரு தொகுதியில் மட்டும் போட்டி)
1996 - 4 (திவாரி காங்கிரஸ் கூட்டணியில் 116 தொகுதிகளில் போட்டி)
2001 - 20 (அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டி)
2006 - 18 (திமுக கூட்டணியில் 31 இடங்களில் போட்டி)
2011 - 3 (திமுக கூட்டணியில் 30 இடங்களில் போட்டி)
2016 - 0 (தனித்துப் போட்டி)
2021 - ? (அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.