TN Election Result 2021 : விருத்தாசலத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு!

TN Election Result 2021 : விருத்தாசலத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு!

பிரேமலதா-விஜயகாந்த்

விருத்தாசலம் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் கட்சி 4 முறையும், அ.தி.மு.க., தி.மு.க. தலா 3 முறையும், தே.மு.தி.க. 2 முறையும், உழவர் உழைப்பாளர் கட்சி, ஜனதா தளம், பா.ம.க., சுயேட்சை ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

  • Share this:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எம் .ஆர் ராதாகிருஷ்ணன் 3331 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழகத்தின் ஸ்டார் தொகுதியாக விளங்கும் விருத்தாசலத்தில் போட்டியிட்டுள்ள பிரேமலதா விஜயகாந்த் முதல் சுற்றின் முடிவில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுக - பாஜக - பாமக ஒரு கூட்டணியாகவும், திமுக - காங்கிரஸ் - விசிக - கம்யூனிஸ்ட்டுகள் மற்றொரு கூட்டணியாகவும் களம் கண்டன. தவிர அமமுக, மநீம, நாதக ஆகியவைகளும் தேர்தலில் போட்டியிட்டன.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்குகள் எண்ணப்படும் என்பதால், முழுமையான முடிவுகள் வெளியாக நள்ளிரவு ஆகலாம் என்று கூறப்படுகிறது. வாக்கு எண்ணப்படும் நிலையில் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் அமமுக கூட்டணி வேட்பாளராக களம் கண்டுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் ஜே.கார்த்திகேயனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணனும் போட்டியிட்டுள்ளனர்.

விருத்தாசலம் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் கட்சி 4 முறையும், அ.தி.மு.க., தி.மு.க. தலா 3 முறையும், தே.மு.தி.க. 2 முறையும், உழவர் உழைப்பாளர் கட்சி, ஜனதா தளம், பா.ம.க., சுயேட்சை ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் முதல் சுற்றின் முடிவில் பிரேமலதா விஜயகாந்த் பின்னடவைவை சந்தித்துள்ளார். அங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார்.
Published by:Arun
First published: