TN Election Result 2021 : எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி 2 மடங்கு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

TN Election Result 2021 :  எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி 2 மடங்கு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

  • Share this:
    சேலம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி 2-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னிலையில் உள்ளார்.

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை பணி இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதன்படி தற்போது வரை திமுக 111 தொகுதிகளிலும் அதிமுக 77 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

    சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பழனிசாமி இரண்டாம் சுற்று முடிவில் 5847 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சம்பத்குமார் 2435 வாக்குகள் பெற்று பின்னடவை சந்தித்துள்ளார். முதல்வர் பழனிசாமி திமுக வேட்பாளரை விட இரண்டு மடங்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    தாராபுரத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் கயல்விழி பின்னடைவை சந்தித்துள்ளார்.

    கூடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் காசிலிலங்கம் முன்னிலையிலும் அதிமுக வேட்பாளர் ஜெயசீலன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

    உதகை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் முன்னிலையிலும் பாஜக வேட்பாளர் போஜராஜன் பின்னடைவையும் சந்தித்துள்ளனர்.ஷ

    மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி முன்னிலையிலும் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பின்னடைவையும் சந்தித்துள்ளனர்
    Published by:Vijay R
    First published: