TN Election Result 2021 : கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கிய அதிமுக: 100+ இடங்களில் முன்னிலை!

TN Election Result 2021 : கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கிய அதிமுக: 100+ இடங்களில் முன்னிலை!

இபிஎஸ்-ஓபிஎஸ்

திமுக ஸ்வீப் செய்யக்கூடிய நிலைமை இருப்பதாகவும் திமுக 160 முதல் 190 இடங்கள் வரை வெல்லும் என்றே கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறின.

  • Share this:
தமிழக சட்டமன்ற தேர்தலில் முடிவுகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்றாக அறிவிப்பு வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை அதிமுக பொய்யாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கடந்த ஏப்ரல் 29ம் தேதி வெளியானது. இதில் பல நிறுவனங்களும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சூழல் இருப்பதாகவே தெரிவித்துள்ளன. திமுக அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்றும் அதிமுக தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களுமே அதிமுகவுக்கு 46 முதல் அதிகபட்சமாக 70 இடங்களுக்குள் தான் கிடைக்கும் என்றே தெரிவித்தன.

2021 கருத்துக்கணிப்பு ஒரு பார்வை:

ரிபப்ளிக் டிவி - சிஎன்.எக்ஸ், ஏபிபி/டைம்ஸ் நவ் - சி வோட்டர், இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா, இந்தியா அகெட், டுடேஸ் சானக்கியா - நியூஸ் 24, டிவி 9, ஷைனிங் இந்தியா நியூஸ், பாட்ரியாட்ரிக் வோட்டர், டெமாக்ரசி டைம்ஸ் நெட்வொர்க், ஸ்பிக் நியூஸ் என ஏறக்குறைய அனைத்து ஊடக நிறுவனங்களுமே திமுக கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளன.

2021 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் - (Source TOI)


திமுக ஸ்வீப் செய்யக்கூடிய நிலைமை இருப்பதாகவும் திமுக 160 முதல் 190 இடங்கள் வரை வெல்லும் என்றே அனைத்து நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறின.

இருப்பினும் அதிமுக கருத்துக்கணிப்பு முடிவுகளை பொய்யாக்கியிருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டி வருகின்றன.

தற்போதைய நிலையில் அதிமுக கூட்டனி 100க்கும் மேலான தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. திமுக கூட்டணி தேர்தல் கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டது போல அல்லாமல் 133 - 134 என்ற அளவிலேயே முன்னிலை பெற்றுள்ளது.

இன்னும் பல சுற்று முடிவுகள் வெளிவர வேண்டிய நிலையில் இருப்பதால் தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் மாறலாம் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜெயக்குமார், பாண்டியராஜன் உட்பட பின்னடைவை சந்தித்துள்ள 8 அமைச்சர்கள்!


இதனிடையே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன், பெஞ்சமின், காமராஜ், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
Published by:Arun
First published: