• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • TN Election Result 2021 : கொங்கு மண்டலத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அ.தி.மு.க: தடுமாறும் தி.மு.க

TN Election Result 2021 : கொங்கு மண்டலத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அ.தி.மு.க: தடுமாறும் தி.மு.க

அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக தலைமை அலுவலகம்

கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறது.

  • Share this:
    தமிழகம் உள்பட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அ.தி.மு.க, தி.மு.க இடையே நெருக்கமான போட்டி இருந்துவருகிறது. தி.மு.க கூட்டணி ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு கூடுதலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது.

    இருப்பினும், 200 தொகுதிகள் வரை தி.மு.க வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. இந்தமுறை கோயம்புத்தூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் தி.மு.க ஆழமாக கால்பதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் தி.மு.க 3 தொகுதிகளிலும், அ.தி.மு.க 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. சேலத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலையில் உள்ளது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுயில் அவர் 40,000 வாக்குகள் வரையில் முன்னிலையில் உள்ளார்.

    கோயம்புத்தூரில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி முன்னிலையில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: