TN Election Result 2021 : ஜெயக்குமார், பாண்டியராஜன் உட்பட பின்னடைவை சந்தித்துள்ள 8 அமைச்சர்கள்!

TN Election Result 2021 : ஜெயக்குமார், பாண்டியராஜன் உட்பட பின்னடைவை சந்தித்துள்ள 8 அமைச்சர்கள்!

முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள்

சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார்.

  • Share this:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர்கள் சிலர் பின்னடைவை சந்தித்துள்ளனர், பலர் முன்னிலையில் உள்ளனர். எந்த அமைசர்கள் எல்லாம் பின்னடைவை சந்தித்துள்ளனர் என்பது குறித்து அறிந்து கொள்வோம்

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுக - பாஜக - பாமக ஒரு கூட்டணியாகவும், திமுக - காங்கிரஸ் - விசிக - கம்யூனிஸ்ட்டுகள் மற்றொரு கூட்டணியாகவும் களம் கண்டன. தவிர அமமுக, மநீம, நாதக ஆகியவைகளும் தேர்தலில் போட்டியிட்டன.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்குகள் எண்ணப்படும் என்பதால், முழுமையான முடிவுகள் வெளியாக நள்ளிரவு ஆகலாம் என்று கூறப்படுகிறது. வாக்கு எண்ணப்படும் நிலையில் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது.

அமைச்சர்கள் பின்னடைவு:

ஜெயக்குமார் - சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார்.

பாண்டியராஜன் - ஆவடி தொகுதியில் அமைச்சர் பாண்டியராஜன் பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு

சிவி சன்முகம் - விழுப்புரம் தொகுதியில் சட்டத்துறை அமைச்சர் சிவி.சன்முகம் பின்னடைவை சந்தித்துள்ளார்.

பெஞ்சமின் - மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமின் பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு திமுக வேட்பாளர் கே,கணபதி 1000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி - ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.

ஓ.எஸ்.மணியன் - வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பின்னடைவை சந்தித்துள்ளார்

காமராஜ்:  நன்னிலம் தொகுதியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

வெல்லமண்டி நடராஜன் - திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட வெல்லமண்டி நடராஜன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

முதல்வர் - துணை முதல்வர் முன்னிலை:

முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் பெரும் அளவிலான முன்னிலையை சந்தித்துள்ளார். அதே போல தேனி மாவட்டம் போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை முந்தி முன்னிலை பெற்றுள்ளார்.

முன்னிலை வகிக்கும் அமைச்சர்கள்:

குமாரபாளையம் தொகுதியில் அமைச்சர் தங்கமணி, கடலூர் தொகுதியில் எம்.சி.சம்பத், கோவில்பட்டி தொகுதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, அமமுக வேட்பாளர் டிடிவி.தினகரனை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளார். அமைச்சர்கள்

ஆரணி தொகுதியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, கருப்பணன். உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் முன்னிலை பெற்றுள்ளனார்.

மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திமுக வேட்பாளரைக் காட்டிலும் 100 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

திமுக தரப்பில் காட்பாடி தொகுதியில் திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவு அடைந்துள்ளார். அதே போல குறிஞ்சிப்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எம் .ஆர் ராதாகிருஷ்ணன் 3331 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார்.
Published by:Arun
First published: