Sasikala Audio: ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தாததே தேர்தல் தோல்விக்கு காரணம் - குற்றஞ்சாட்டும் சசிகலா

சசிகலா

ஆட்சியை இவர்களே தூக்கி கொடுத்தது போல் தெரிகிறது என தொண்டர்களிடையே சசிகலா பேசியுள்ளார்.

  • Share this:
    ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தாதே தேர்தல் தோல்விக்கு காரணம் என அ.தி.மு.க தொண்டர்களிடையே சசிகலா பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா கடந்த ஒரு மாதகாலமாக அதிமுக தொண்டர்களிடையே போனில் பேசி வருகிறார். இதுதொடர்பான ஆடியோவும் வெளியாகிவருகிறது. தொண்டர்களை நம்பி இருக்கும் இயக்கம். கட்சியை மீட்டெடுக்கவேண்டும். ஆட்சி அதிகாரத்துக்கு மீண்டும் வரவேண்டும் என தொண்டர்களிடையே பேசி வருகிறார். இது ஈபிஎஸ். ஓபிஎஸ் உள்ளிட்ட அ.தி.மு.க தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

    Also Read: தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் வகை வைரஸ் பாதிப்பு - தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

    இதன்காரணமாக அ.தி.மு.க எம்.எல்.ஏ கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் போடப்பட்டது. பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட சில நிர்வாகிகளையும் அதிரடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினர். என்னதான் தீர்மானம் போட்டால் சசிகலா டாக் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பொன்னமராவதியை சேர்ந்த அ.தி.மு.க தொண்டர் பாரதிராஜாவுடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் சாதனைகளை கூறவில்லை. அதிமுக விளம்பரங்களில் ஜெயலலிதாவின் முகத்தையே பார்க்க முடியவில்லை. அதனை நினைத்து நான் மிகவும் வேதனைப்பட்டேன். தேர்தல் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம். அ.ம.மு.க பிரிந்திருக்க கூடாது. எல்லோரும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். ஆட்சியை இவர்களே தூக்கி கொடுத்தது போல் தெரிகிறது. ஜெயலலிதா இருந்த போது நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தோம். எவ்வளவு பெரிய கட்சியை இன்றைக்கு 4,5 பேரின் கட்சியாக மாற்றியுள்ளனர். அதனை நிச்சயம் மாற்றிக்காட்ட வேண்டும் என பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: