வாக்காளர் அட்டை இல்லையா? உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இந்த ஆவணத்தை பயன்படுத்துங்கள்...!

வாக்காளர் அட்டை இல்லையா? உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இந்த ஆவணத்தை பயன்படுத்துங்கள்...!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: December 17, 2019, 4:13 PM IST
  • Share this:
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்கான 12 வகை அடையாள அட்டைகளின் விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல், வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்நிலையில், வாக்காளர் அட்டை தவிர்த்து  பொதுமக்கள் வாக்களிக்க பயன்படுத்தக்கூடிய ஆவணங்களை தேர்தல் ஆனையம் பட்டியலிட்டுள்ளது.


அதன்படி,

1. வாக்காளர் அடையாள அட்டை,

2. ஆதார் கார்டு,3. பாஸ்போர்ட்,

4. ஓட்டுநர் உரிமம்

5. அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்கள்  அடையாள அட்டையை காண்பிக்கலாம்

6. பொதுத்துறை வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களின் கணக்கு அட்டை,

7. பான் கார்டு,

8. ஸ்மார்ட் ரேஷன் கார்டு (குடும்பத் தலைவர்களின் புகைப்படம் மட்டும் அடையாள அட்டையில் இருந்தால் அவர் மட்டுமே அந்த ஆவணத்தை பயன்படுத்த முடியும்.)

9. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான அடையாள அட்டை,

10. மத்திய, மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டுக்கான அடையாள அட்டை,

11. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள்

12. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்., நியமன உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை ஓட்டுபோட பயன்படுத்தலாம்.

 

Also see...
First published: December 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading