• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் - கே.டி.ராகவன் நம்பிக்கை

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் - கே.டி.ராகவன் நம்பிக்கை

கே.டி. ராகவன்

கே.டி. ராகவன்

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் நம்பிக்கை தெரிவித்தார்.

  • Share this:
    தமிழகத்தில் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வெற்றிவேல் யாத்திரையை தொடங்கி திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை செல்ல இருக்கிறார். இதில் நவம்பர் 17-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு வெற்றிவேல் யாத்திரை வர உள்ளது. இதனை அடுத்து வெற்றிவேல் யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும், வெற்றிவேல் யாத்திரையில் கலந்துகொள்வது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.டி.ராகவன்,
    தமிழகத்தில் இறை நம்பிக்கைக்கு எதிராக தமிழ்க் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தைக் கொச்சைப்படுத்துதல், கடவுள் நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தி, இந்துப் பெண்களை மிகத் தவறாக வர்ணிப்பது என்பதெல்லாம் கடந்த காலங்களில் நடந்துகொண்டிருக்கின்றன. இதை எதிர்த்து மத்திய பாஜக அரசு, மோடியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக வெற்றிவேல் யாத்திரை ஒரு மாத காலம் நடைபெறும் என்றார்.

    Also read: எம்.ஜி.ஆர் படத்தைப் பயன்படுத்தும் பாஜக - விமர்சிக்கும் ப.சிதம்பரம்



    பாரதிய ஜனதா கட்சி அபாரமாக வளர்ந்து வருவதாகக் கூறிய கே.டி.ராகவன், எங்களுடைய வெற்றிவேல் யாத்திரை நடத்தவேண்டும் என்ற ஆன்மிக பெரியவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப தமிழகத்தில் சுமார் 60 லட்சம் பேர் தங்களது இல்லங்களில் வேல் பூஜை நடத்தினார்கள். பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திலேயே வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட எதிர்க்கட்சிகள், பொறாமையின் காரணமாக இந்த யாத்திரையைத் தடுத்துவிட வேண்டும் என்று புகார் அளிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவதாகச் சொல்லி நடத்தினார்கள். அப்பொழுது இவர்கள் எல்லாம் ஏன் அந்த ஆர்ப்பாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என கேட்கவில்லை. இதுபோன்ற கோரிக்கைகளை மாநில அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார். மேலும், வருகிற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி பொறுப்புக்கு வரும். அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும் என தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: