ஏப்ரல் 14-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம்!

ஏப்ரல் 14-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம்!
  • Share this:
மார்ச்- ஏப்ரல் மாத மின் கட்டணத்தை அடுத்த மாதம் 14-ம் தேதி வரை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவுறுத்தியுள்ளது.

ஊரடங்கு காரணமாக கடந்த 22-ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை மீட்டர் ரீடிங் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், வீடு, கடை உள்ளிட்டவற்றிற்கான தாழ்வழுத்த மின் இணைப்பு மற்றும் தாழ்வழுத்த மின் நோட்ட மின் மாற்றி இணைப்பு வாடிக்கையாளர்கள், ஜனவரி - பிப்ரவரியில் செலுத்திய மின் கட்டணத்தையே மார்ச்-ஏப்ரல் மாதத்திற்கு செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் இம்மாத கட்டணம் கூடினாலோ, குறைந்தாலோ, மே-ஜூன் மாத கட்டணத்தில் அது கழிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Also see...
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading