Home /News /tamil-nadu /

பொங்கல் நாட்களில் கோவிலுக்கு மக்கள் செல்ல தடை

பொங்கல் நாட்களில் கோவிலுக்கு மக்கள் செல்ல தடை

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டின்படி,  14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் நாளான ஜனவரி 16ம் தேதி (ஞாயிறு)  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் ஒருபகுதியாக  பொங்கல் விடுமுறை நாட்களில்  கோவிலுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு வார நாட்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகள் இன்றுடம் நிறைவடையும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்கள் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை அமலில் உள்ளது. வரும் 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகை என்பதால் கோவில்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் நிலவியது. இந்நிலையில்,  வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டின்படி,   14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காணும் பொங்கல் நாளான ஜனவரி 16ம் தேதி (ஞாயிறு)  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். அதன்படி இம்மாதம் 31ம் தேதிவரை வார நாட்களில் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.

    இதையும் படிங்க: ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31 வரை நீட்டிப்பு - முழு விவரம்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Lockdown, Tamilnadu, Temple

    அடுத்த செய்தி