9-வது முறையாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்!

2021-ம் ஆண்டு அடுத்த சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மிகுந்த கவனம் பெறும்.

9-வது முறையாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
  • News18
  • Last Updated: February 13, 2020, 4:34 PM IST
  • Share this:
2020-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நாளை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

துணை முதல்வர் தமிழக நிதித்துறையையும் சேர்த்துக் கவனித்து வருவதால் ஒன்பதாம் முறையாக தமிழக பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார். 2021-ம் ஆண்டு அடுத்த சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மிகுந்த கவனம் பெறும்.

முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, குடியுரிமை திருத்த சட்டம் பிரச்னை, 'ஹைட்ரோ கார்பன்' திட்டம், 'குரூப் - 4' தேர்வு முறைகேடு உட்பட பல்வேறு பிரச்னைகளை, எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.

மேலும் பார்க்க: பட்ஜெட்டில் திட்டநிலை அறிக்கையையும் சேர்த்து வெளியிடணும் - சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்