பா.ஜ.க-வை வாழ்த்தி முதல்வராக முயல்கிறாரா ஓ.பி.எஸ்? - ப.சிதம்பரம் கேள்வி

news18
Updated: May 16, 2018, 1:44 PM IST
பா.ஜ.க-வை வாழ்த்தி முதல்வராக முயல்கிறாரா ஓ.பி.எஸ்? - ப.சிதம்பரம் கேள்வி
ப. சிதம்பரம் - முன்னாள் மத்திய நிதியமைச்சர்
news18
Updated: May 16, 2018, 1:44 PM IST
தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இந்தி திணிப்பை வரவேற்கிறாரா? அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்த நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கும், பிரம்மாண்டமான முறையில் தென்னிந்தியாவில் நுழையும் பாஜகவிற்கும், அக்கட்சியின் தலைவர் அமித் ஷாவுக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். கர்நாடக தேர்தலில் பா.ஜ.க பெற்ற வெற்றிக்கு மோடியின் செயல்பாடுகளே காரணம் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக துணை முதல்வரின் இந்த கருத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் , கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை "தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு" என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன்?, இந்தி திணிப்பை வரவேற்கிறாரா? அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா? இல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Loading...
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்