தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு: 21 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை

கொரோனா வைரஸ்

மிழகத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது. அதன் பின்னர் தற்போதுதான், இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 2,558 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

  • Share this:
    கொதமிழகத்தில் மூன்றரை மாதங்களுக்கு பின்னர்  தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்துக்கும் கீழாக பதிவாகியுள்ளது.

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மே மாதத்தில் இது உச்சமடைந்தது. தற்போது இந்த பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,34,136 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 25,37,373 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது. அதன் பின்னர் தற்போதுதான், இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது.

    கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 2,558 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 24,76,339 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    27,282 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதித்து இன்று மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 33,752 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் கொரோனா காரணமாக எவ்வித  உயிரிழப்பு பதிவாகவில்லை.

    தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று கோயம்புத்தூரில் 209 பேருக்கும், சென்னையில் 147 பேருக்கும் , சேலத்தில் 136 பேருக்கும், ஈரோட்டில் 122 பேருக்கும்,கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published: