அரசு ஊழியர்களுக்கான மூன்று சதவிகித அகவிலைப்படி உயர்வு அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
75-வது சுதந்திர தின உரையில் மாநில அரசுப் பணியாளர்களுக்கு 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தில் உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.
இதன் அடிப்படையில் இன்று வெளியிடப்பட்ட அரசாணையில், மாதம் ஒன்றுக்கு அடிப்படை ஊதியத்தில் 34% அகவிலைப்படை திருத்தியமைக்கப்படும். இந்த ஆணையில் அனுமதிக்கப்பட்ட கூடுதல் அகவிலைப்படி ஜுலை 01 (01-07-2022) முதல் ரொக்கமாக வழங்கப்படும். 2022, ஜனவரி (01.01.2022) முதல் ஜூன் (30-06-2022) மாத அகவிலைப்படியானது தொடர்ந்து 31 சதவிதமாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜுலை மாத அகவிலைப்படி நிலுவை தொகையினை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் (cashless mode of Electronic Clearance System) வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர ஊதியம் பெற்று தற்போது அகவிலைப்படி பெறும் முழுநேர பணியாளர்களுக்கு மட்டும் இந்த உயர்வு பொருந்தும் என்றும் பகுதிநேர பணியாளர்களுக்கு (Part Time Employees) இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.
மேலும், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு, ஏஐசிடிஇ சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில் நுட்பப் பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குநர்கள் / நூலகர்கள் ஆகியோருக்கும் பொருந்தும்.
இதையும் வாசிக்க: மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமனம் - ஆளுநர் அறிவிப்பு
மேலும், சிறப்பு காலமுறை ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய்த் துறையிலுள்ள கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள்; குழத்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள்/ எழுத்தர்கள் மற்றும் ஏணைய பணியாளர்களும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.