தமிழகத்தில் கடுமையாக்கப்படும் ஊரடங்கு: காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி!

கடுமையாக்கப்படும் ஊரடங்கு

பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நடைபாதை காய்கறி, பூ, பழக்கடைகள் இனி செயல்பட அனுமதி இல்லை.

  • Share this:
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு காட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி தமிழகத்தில் ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,

சனிக்கிழமை காலை 4 மணி முதல் மே 24ம் தேதி வரை ஏற்கெனவே அமலில் உள்ள விதிமுறைகளுடன் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட கடைகள் அனைத்தும் இனி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் என்றும்,

டன்சோ போன்ற மின் வணிக நிறுவனங்கள் மளிகை, இறைச்சி உள்ளிட்டவற்றை விநியோகம் செய்ய காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

மளிகை, பலசரக்கு. காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் தவிர இதர கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

ஏடிஎம், பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும், ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நடைபாதை காய்கறி, பூ, பழக்கடைகள் இனி செயல்பட அனுமதி இல்லை.

சனிக்கிழமை முதல் தேநீர்க்கடைகள் இயங்க அனுமதி இல்லை.

மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.

திருமணம், முக்கிய உறவினர் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர் தேவை போன்றவற்றுக்கு மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்ய இ-பதிவு செய்து ஆதாரத்தை வைத்து தடையின்றி பயணம் செய்யலாம். மே 17 காலை 6 மணி முதல் இ பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அறிவித்தபடி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் பரவலாக மாற்றம் செய்ய மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: