Home /News /tamil-nadu /

"கூட்டணி என்பதால் அனைத்துக் கட்சிகளின் முடிவும் அவசியம்" - கே.பாலகிருஷ்ணன்!

"கூட்டணி என்பதால் அனைத்துக் கட்சிகளின் முடிவும் அவசியம்" - கே.பாலகிருஷ்ணன்!

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூக நிலை எட்டப்படுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூக நிலை எட்டப்படுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக நிலை எட்டப்பட்டுள்ள என்றார். மேலும், பிற கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், தொகுதிகள் குறித்து இறுதி செய்யப்படும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூக நிலை எட்டப்படுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுகவுடன் கூட்டணியில் தொடரும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்தையை தொடங்கியுள்ளது.

    இந்த முக்கிய நான்கு கட்சிகளுடனும் இன்று ஒரே நாளில் பேச்சுவார்த்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான தொகுதிப் பங்கீட்டு குழுவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் மூத்த தலைவர்களான ஜி.ராமகிருஷ்ணன், சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

    பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், தொகுதிப் பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக நிலை எட்டப்பட்டுள்ளது என்றார். மேலும், பிற கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், தொகுதிகள் குறித்து இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

    மேலும், அடுத்து யார் ஆட்சிக்கு வரக்கூடாது என மக்கள் எண்ணும் கட்சிகளான அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளதாக கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார். அத்துடன், இவர்கள் மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்து வந்த பாமக இணைந்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் சாடினார்.

    மார்க்சிஸ் கட்சியைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. பின்னர், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: DMK, K.balakrishnan, Lok Sabha Election 2019

    அடுத்த செய்தி