• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் 8,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 8,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 904 பேருக்கும், ஈரோட்டில் 870 பேருக்கும், சேலத்தில் 517 பேருக்கும், சென்னையில் 455 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 7,817 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,66,862 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 7,817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,22,497 ஆக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 17,043 கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிலுருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,21,928 ஆக உள்ளது.

    கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 182 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 31,197 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 904 பேருக்கும், ஈரோட்டில் 870 பேருக்கும், சேலத்தில் 517 பேருக்கும், சென்னையில் 455 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: