தமிழகத்தில் குறைந்த கொரோனா பரவல்: குறையாத குழந்தைகள் பாதிப்பு அளவு..

தமிழகத்தில் குறைந்த தொற்று பரவல்: குறையாத குழந்தைகள் பாதிப்பு அளவு - தினசரி 100 குழந்தைகளுக்கு கொரோனா!

ஜூலை மாதத்தில் 25 நாட்களில் 3 ஆயிரத்து 367 குழந்தைகளுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு சராசரியாக 100 குழந்தைகள் புதிதாக தொற்றுக்கு ஆளாகின்றனர்.

 • Share this:
  தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ள போதிலும், பாதிக்கப்படும் குழந்தைகளின் அளவு 5 சதவீதமாகவே நீடித்து வருகிறது.

   உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தியபோதிலும், குழந்தைகளுக்கு பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தவில்லை. எனினும், கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த அலையில் இருந்த அளவுக்கு, இன்னும் குறையவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடந்த ஆண்டில் கொரோனா முதல் அலையின் போது அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் 7 ஆயிரத்து 826 குழந்தைகள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். இரண்டாவது அலையில் அதை விட நான்கு மடங்கு அதிகமாகி மே மாதத்தில் மட்டும் 33 ஆயிரத்து 243 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு, ஜூன் மாதத்தில் 14 ஆயிரத்து 538 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படது.

  தற்போது ஜூலை மாதத்தில் 25 நாட்களில் 3 ஆயிரத்து 367 குழந்தைகளுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு சராசரியாக 100 குழந்தைகள் புதிதாக தொற்றுக்கு ஆளாகின்றனர். மாநிலத்தில் தினசரி புதிய தொற்றாளர்களில் சுமார் 5 சதவீதம் பேர் குழந்தைகளாக உள்ளனர்.

  Also read: செல்லப்பிராணிகளுக்கு பரவும் பார்வோ வைரஸ்: கூடுதல் கவனம் செலுத்த கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

  ஜூன் மாதத்தை ஒப்பிடும் போது ஜூலை மாதத்தில் பாதிப்பு குறைந்திருந்தாலும், கடந்த அலையின் குறைந்தபட்ச எண்ணிக்கையை இன்னும் தமிழ்நாடு தொடவில்லை.

  கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 7 ஆயிரத்து 826 குழந்தைகள், ஆகஸ்ட் மாதத்தில் 7 ஆயிரத்து 485 குழந்தைகள் என பாதிப்பு தீவிரமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் குறைந்து 4 ஆயிரத்து 22 குழந்தைகள் தொற்றுக்கு ஆளாகினர். பின்பு பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 885 என குறைந்தது. இது தான் இது வரையிலான மாதாந்திர குறைந்தபட்ச எண்ணிக்கையாகும்.

  Also read: தமிழகத்தில் இன்று 1,785 பேருக்கு கொரோனா: 5 மாவட்டங்களில் 100க்கும் மேல் பாதிப்பு!

  இரண்டாவது அலை தொடங்கிய போது, ஒட்டுமொத்த பாதிப்புகள் அதிகரிப்பு, குழந்தைகளின் எண்ணிக்கையிலும் பிரதிபலித்தது. மார்ச் மாதத்தில் ஆயிரத்து 272 என மெல்ல உயர்ந்த பாதிப்பு, ஏப்ரல் மாதத்தில் 9 ஆயிரத்து 586-ஆக உயர்ந்தது.

  பின்னர் மே மாதத்தில் உச்சம் தொட்டது. எனினும், பாதிப்பு அளவு பிப்ரவரி மாதத்தை போல இன்னும் 1000-க்கு கீழான அளவுக்கு குறையவில்லை. எனவே, இரண்டாவது அலையின் பாதிப்பிலிருந்து முழுமையாக வெளிவரவில்லை என்பதை இந்த தரவுகள் உணர்த்துகின்றன.

   
  Published by:Esakki Raja
  First published: