Home /News /tamil-nadu /

Booster Dose: கொரோனா பூஸ்டர் தடுப்பூசி - பொதுமக்கள் ஆர்வம்

Booster Dose: கொரோனா பூஸ்டர் தடுப்பூசி - பொதுமக்கள் ஆர்வம்

பூஸ்டர் தடுப்பூசி

பூஸ்டர் தடுப்பூசி

ஏற்கனவே  2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையில் மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், முதியோர் ஆகியோருக்கு பூஸ்டர் ஊசி போடப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 60 வயதை கடந்தவர்கள், முதியோர் ஆகியோருக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசியை செலுத்திகொண்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று  மற்றும் ஓமைக்ரான் பரவல் தற்பொழுது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இன்று  முதல்  60 வயதை கடந்தவர்கள், முதியோர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே  2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.  பூஸ்டர் ஊசி போடும் திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார்.  இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் பூஸ்டர் ஊசி போடும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் விசாகன் கமலா நேரு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  துவக்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையில் மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் ஊசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு பூஸ்டர் ஊசி போட்டுக் கொள்ள அவர்களது செல்போனுக்கு  எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது.

    இதையும் படிங்க: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி : திருவண்ணாமலையில் ஏராளமான முன்கள பணியாளர்கள் செலுத்திக்கொண்டனர்


     எஸ்எம்எஸ் வந்ததை காட்டி 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆர்வத்துடன் பூஸ்டர் ஊசி போட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 158 முகாம்களில் பூஸ்டர் ஊசி போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதேபோல் தகுதியுள்ள மருத்துவ பணியாளர்கள் 5,639 பேருக்கும், முன் களப்பணியாளர்கள் 11,789 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோர்களில்  தகுதியுடைய 8,388 பேர் உட்பட மொத்தம் 25,815 பேருக்கு வருகின்ற 31-ஆம் தேதிக்குள் பூஸ்டர் ஊசி போடப்பட உள்ளது இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் விஷாலும் பூஸ்டர் ஊசியை போட்டுக் கொண்டார்.

    மேலும் படிங்க: கொரோனா ஊரடங்கு அச்சம்.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Tamilnadu

    அடுத்த செய்தி