ரவுடி பேபி சூர்யா மீது காங்கிரஸ் நிர்வாகி டிஜிபி அலுவலகத்தில் புகார்!

ரவுடி பேபி சூர்யா

சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, சந்தான லட்சுமி, காத்து கருப்பு, சேலம் மணி, உள்பட சிலர் ஆபாச பேச்சுக்களை பேசியும் நடித்தும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • Share this:
இணைய தளங்களில் ஆபாச பேச்சுக்களை பதிவு செய்து வரும் ரவுடி பேபி சூர்யா உள்பட சிலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சமூக வலைதள பக்கங்களில் ரவுடி பேபி சூர்யா, ஜி.பி முத்து, திருச்சி சாதனா உள்ளிட்ட டிக்டாக் பிரபலங்களின் ஆபாச பேச்சு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கிடையே உள்ள பிரச்னைகளை ஆபாச பேச்சுக்கள் மூலம், யூடியூப் பக்கங்களில் வீடியோவாக வெளியிட்டு தங்களை இன்னும் பிரபலபடுத்திக் கொள்வதை இவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதை சிலர் ரசித்தாலும் அதிகளவில் எதிர்ப்புகளும் அதிகரித்திருக்கின்றன.

இந்நிலையில், ரவுடி பேபி சூர்யா மீது தமிழக காங்கிரஸ் கட்சி தென்சென்னை மாவட்ட செயலாளர் புனிதவள்ளி, சமூக ஆர்வலர் சுமித்ரா, எல்லை பாதுகாப்பு படை வீரர் காளிராஜ் ஆகியோர் கூட்டாக இன்று தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தனர்.

ஆனால் டிஜிபி அலுவலக பாதுகாப்பு பிரிவு போலீசார் இன்று அதிகாரிகள் இல்லை என்பதால் புகாரை ஆன்லைனில் கொடுக்கும்படி அறிவுறுத்தினர். பிறகு செய்தியாளர்களிடம் சமூக ஆர்வலர் சுமித்ரா கூறுகையில், "சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, சந்தான லட்சுமி, காத்து கருப்பு, சேலம் மணி, உள்பட சிலர் ஆபாச பேச்சுக்களை பேசியும் நடித்தும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர். ஆபாச பேச்சுக்கள் முகம் சுழிக்க வைக்கிறது. பள்ளி மாணவ- மாணவிகள், இளைஞர்கள் போன்றோர் இவர்களின் ஆபாச பேச்சுக்களால் மிகவும் பாதிக்கப்பட உள்ளதால் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களின் ஆபாச இணைய தளங்களை முடக்க செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சுமித்ரா கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கனவே ஆபாச பேச்சு வழக்கில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். அவரைப் போலவே இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது. இந்நிலையில் பள்ளி தாளாளர் முஹைதீன் இப்ராஹிம் என்பவர் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். பப்ஜி மதன் போன்று இவர்கள் மீதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் இணையவாசிகள்.
Published by:Arun
First published: