ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் இறந்ததது இந்தியாவிற்கு, இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய இழப்பு என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, பிபின் ராவத் மரணம் இந்தியாவை திக்குமுக்காட செய்துள்ளது. சிறந்த தலைவன், சிறந்த தேசப்பக்தன் என பிபின் ராவத்துக்கு புகழாரம் சூட்டிய அவர், ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் இறந்ததது இந்தியாவிற்கு, இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய இழப்பு.
பிபின் ராவத் மரணம் காரணமாக சோனியா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டத்தை தள்ளி வைத்துள்ளோம். நவீன வசதியுடைய ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது பனிமூட்டம் தடையாக இருந்ததா என்பது குறித்து முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்திய ராணுவம் சிறந்த முறையில் புலனாய்வு மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.
Also read... பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களை எடுத்துச் செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனங்கள்!
பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 7 ஆண்டுகளாக நாடாளுமன்றம் ஜனநாயக போக்கில் செல்லவில்லை. வேளாண் சட்டம் திரும்ப பெற்றபோது விவாதம் நடத்தவில்லை என்றும் நாடாளுமன்றம் இருப்பதே விவாதம் நடத்துவதற்குதான். வரலாற்றில் விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்றுவது பாஜக ஆட்சியில்தான் மட்டும் தான் என குற்றஞ்சாட்டினார்.
நாடளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பேசுவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் விவாதம் நடத்த வேண்டும் என்பதால்தான் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றது என கே.எஸ்.அழகிரி விளக்கமளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.