முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் காங். ஆர்ப்பாட்டம்

ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் காங். ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கொடி

காங்கிரஸ் கொடி

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சிறுபான்மை மக்கள் விரோத நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்துள்ளதாக சென்னை மாவட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது.

சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் தலைமையில் இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மானியத்தை ஏன் ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசிடம் பல லட்சம் கோடி ரூபாய் உள்ளது. அதில் இருந்து இஸ்லாமிய பெண்களுக்கு உதவி செய்யலாம், ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இஸ்லாமியர்கள் இதனை வரவேற்பதாக தமிழிசை கூறியிருப்பது தவறானது” என்று கூறினார்.

மேலும், “ஹஜ் புனித பயணத்திற்கு மத்திய அரசு மானியத்தை ரத்து செய்திருப்பது கண்டனத்துக்குரியது. தொடர்ந்து சிறுபான்மையினரின் மீது இத்தகைய நடவடிக்கையை பாஜக அரசு எடுத்து வருகிறது. ஹஜ் மானியத்தை ரத்து செய்து ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு வழங்குவதாக சொல்வது ஏற்புடையதல்ல. ஹஜ் மானிய விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். அதனை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம், மேற்கு சென்னை மாவட்டத் தலைவர் க.வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை ஏழுப்பினர்.

First published:

Tags: BJP, Congress, Haj, Protest, Subsidy