• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தென்னிந்தியாவில் பாஜக சித்து விளையாட்டு எடுபடாது - கே.எஸ்.அழகிரி!

தென்னிந்தியாவில் பாஜக சித்து விளையாட்டு எடுபடாது - கே.எஸ்.அழகிரி!

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

ஊடரங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவு ரயிலில் முன்பதிவு செய்யாதவர்கள் பயணிப்பது குறித்து  நாடாளுமன்றத்தில்காங்கிரஸ் எம்.பி க்கள் பேசுவார்கள் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவாவை போல், புதுவையில் பா.ஜ.க பின்வழியாக நுழைய முடியாது, இது தென் இந்தியா. பாஜக தனது சித்து விளையாட்டை இங்கு தொடர முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூரார் ராமசாமியின் பிறந்தநாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி பேசியதாவது,சுதந்திர இந்தியாவின் தமிழகத்தில் முதல் முதலமைச்சர் ஓமந்தூரார் ராமசாமி.காந்தியத்தின் உண்மையான வாரிசாக விளங்கியவர்.காந்திய கருத்துக்களை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர்.புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ந்து, பாஜக ஆட்சியை அமைக்கமோடியில் இருந்து பாஜகவின் கடைக்கோடி வரை எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நேற்று தமிழகம் வந்து இருந்தார். ஆனால்மிக மோசமாக அளவிற்கு தான் பாஜவால் கூட்டம் சேர்க்க முடிந்தது.ஜே.பி.நட்டா, ராகுல் காந்தியின் தமிழகம் வருகையோடு ஒன்றோடு ஒன்று ஒப்பிட முடியாது.புதுவையில் கருப்பு ஆடுகள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி உள்ளனர்.ஆனாலும், அங்கு காங்கிரஸ் அரசு நீடிக்கிறது.பாஜக நினைத்தது போலகோவா போன்ற மாநிலங்கள் அல்ல,இது தென் இந்தியா. பாஜக தனது சித்து விளையாட்டை இங்கு தொடர முடியாது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆக்கபூர்வமான கருத்துக்களை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் பேசுவார்கள். பட்ஜெட் தாக்கல் செய்தாலும்நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்யும் வல்லமை பாஜக விடம் இல்லை.சிறந்த வரவு, செலவு திட்டத்தை பாஜவால் தரமுடியாது.10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜி.டி.பி குறைந்துள்ளது.

Also read... சசிகலா சிறையில் இருந்து வெளி வந்திருப்பது சிலருக்கு தடுமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் - டி.ராஜேந்தர்!

சிறுதொழில்கள் நசுக்கப்பட்டுள்ளது, தவறான ஜி.எஸ்.டி காரணமாக தொழில்செய்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊடரங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவு ரயிலில் முன்பதிவு செய்யாதவர்கள் பயணிப்பது குறித்து  நாடாளுமன்றத்தில்காங்கிரஸ் எம்.பி க்கள் பேசுவார்கள்.

காவேரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் சேதமடைந்து உள்ளது. தமிழக அரசுரூபாய் 20 ஆயிரம் அறிவித்து உள்ளது.உற்பத்தி செலவு, மீண்டும் உற்பத்தி செய்வதற்கான செலவை சேர்த்து தமிழக அரசு வழங்க வேண்டும்.அப்படி செய்தால் தான் விவசாயிகள் மீண்டும் எழ முடியும், என தெரிவித்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: