ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த விருப்பம் - எடப்பாடி பழனிசாமி

ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த விருப்பம் - எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)
  • News18
  • Last Updated: September 12, 2019, 10:25 AM IST
  • Share this:
தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். மோட்டார் வாகன சட்டத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் என்று பரிசீலித்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, வெளிநாட்டுப் பயணத்தில் முதலீடுகளை ஈர்த்தது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். திமுக ஆட்சியில் எத்தனை முறை வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என முதல்வர் பழனிசாமி வினா எழுப்பினார்.

ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டால், அதனை செயல்படுத்துவதற்கு ஐந்து முதல் 6 ஆண்டுகள் பிடிக்கும் என்று முதலமைச்சர் கூறினார். முதலீடுகளைப் பெறுவது தொடர்பாக, தங்களுக்கு பாராட்டு விழா நடத்துவதைவிட, மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே பாராட்டு தான் என்று முதலமைச்சர் கூறினார்.


ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் போன்ற வெளிநாட்டு தொழில் நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்று முதலமைச்சர் தெரிவித்தார். வெளிநாடுகளில் குறைந்தபட்சம் 10 வழிச் சாலைகளே இருப்பதாகவும், இங்கு எட்டுவழிச் சாலைக்கே எதிர்ப்புகள் நிலவுவதாகவும் அவர் கூறினார்.

மோட்டார் வாகன சட்டத்தை எந்த முறையில் செயல்படுத்தலாம் என அரசு பரிசீலித்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்திவரும் நிலையில், மக்களிடம் தவறான தகவல்களை மு.க.ஸ்டாலின் கூறிவருவதாக அவர் குற்றம்சாட்டினார். குடிமராமத்துப் பணிகளில் எந்த இடத்தில் ஊழல் நடைபெறுகிறது என்று கூறினால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் உறுதியளித்தார்.
First published: September 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்