"தமிழகத்தில் எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக வேண்டும்" - உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி முதல்வர் அறிக்கை

எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: November 30, 2019, 2:11 PM IST
  • Share this:
தமிழகத்தில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

உலக எய்ட்ஸ் தினம் நாளை கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், எய்ட்ஸை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.

மீம்ஸ் போட்டிகள், நடமாடும் விழிப்புணர்வு வாகனங்கள் மூலமாக மக்களிடையே எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


எய்ட்ஸ் நோயை தடுக்க, தன்னார்வ ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், எய்ட்ஸ் தொற்றுள்ளோரை பரிவுடன் அரவணைத்து, அவர்களிடையே தன்னம்பிக்கை வளர உதவ வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also see...
First published: November 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading