Home /News /tamil-nadu /

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

இந்த உயர்வு 01.07.2022 முதல்  வழங்கப்படும்.  ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இது பொருந்தும்.

  • 1 minute read
  • Last Updated :
    மாநில அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து  34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். பின்பு, தகைசால் தமிழர் விருது, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல்ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன.

    முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையின் போது, "மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும்" என்றுதெரிவித்தார்.

    இந்த உயர்வு 01.07.2022 முதல்  வழங்கப்படும்.  ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவித்தார். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.1947.60 கோடி செலவாகும். இதன் மூலம் 16 லட்சம் பேர்  பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தகைசால் தமிழர் விருது: சங்கரய்யா போல் பணத்தை திருப்பிக் கொடுத்த நல்லகண்ணு

    முன்னதாக, கடந்தாண்டு டிசம்பர் மாதம் மாநில அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி விகிதத்தினை 17 என்ற அளவில் இருந்து 31% ஆக தமிழக அரசு உயர்த்தியது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% உயர்வு மூலம் 34% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: CM MK Stalin, Government Employees, Independence day

    அடுத்த செய்தி