• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெர்மனி கொலோன் பல்கலை. தமிழ்த்துறைக்கு தமிழக அரசு ரூ.1.25 கோடி நிதியுதவி!

ஜெர்மனி கொலோன் பல்கலை. தமிழ்த்துறைக்கு தமிழக அரசு ரூ.1.25 கோடி நிதியுதவி!

கொலோன் பல்கலைக்கழகம்

கொலோன் பல்கலைக்கழகம்

அமெரிக்கவாழ் இந்தியர்கள் தமிழ்த் துறை தொடர்ந்து இயங்குவதற்குத் தேவையான நிதியில் பாதியைத் திரட்டி கொலோன்பல்கலைக்கழகத்திற்கு அளித்ததால், தமிழ்ப் பிரிவை மூடும் முடிவு ஜூன் 2022 வரை ஒத்திவைக்கப்பட்டது

  • Share this:
ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தோய்வின்றி இயங்க தமிழக அரசு சார்பில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஜெர்மனியில் உள்ள கொலோன்பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தமிழியில் ஆய்வு நிறுவனம் 1963ஆம்ஆண்டில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த2014ஆம் ஆண்டு கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்குஉருவான நிதிப்பற்றாக்குறையால், அங்கு பணிபுரிந்த தமிழ்ப் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ்  செப்டம்பர் 2020இல் ஓய்வு பெற்றபின், தமிழ்ப் பிரிவை மூடுவதாக அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் தமிழ்த் துறை தொடர்ந்து இயங்குவதற்குத் தேவையான நிதியில் பாதியைத் திரட்டி கொலோன்பல்கலைக்கழகத்திற்கு அளித்ததால், தமிழ்ப் பிரிவை மூடும் முடிவு ஜூன் 2022 வரை ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் படிக்க: தமிழகத்திற்கு வழங்கப்பட்டதை விட அதிக தடுப்பூசி செலுத்தல்: சாத்தியமானது எப்படி?


கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு தேவையான நிதியில் 1 கோடியே 25 இலட்சம் ரூபாயை, 2019இல் அப்போதைய தமிழக அரசு வழங்குவதாக அறிவித்திருந்தது.  அதனைஉடனடியாக அளித்து அப்பல்கலைக்கழகத்திற்கு உதவ வேண்டுமெனஅப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின்  வலியுறுத்தியிருந்தார். எனினும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அத்தொகை விடுவிக்கப்படாததை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை தொடர்ந்து, தொய்வின்றி,இயங்கிட ஏதுவாக, தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு கோடியே 25 இலட்சம்ரூபாயை உடனடியாக கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு வழங்கிட உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளாக தண்ணீர் திருட்டு தெரிந்து நடந்ததா? ஒ.பி.எஸ்க்கு அமைச்சர் பிடிஆர் கேள்வி...


கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை இன்னும் இரண்டு ஆண்டுகளில் 60 ஆண்டுகளைக் காணும் நல்வாய்ப்பிற்கு உதவிடும் என்பதோடு, தமிழ்மொழி, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை உலகளவில் பரவிட என்றென்றும்  தமிழக அரசு துணை நிற்கும்” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: