2 -ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: 50 சதவீத நிதி வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை துவங்க உரிய அனுமதியை துரிதமாக வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

Web Desk | news18
Updated: February 11, 2019, 11:20 AM IST
2 -ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: 50 சதவீத நிதி வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
Modi- Palanisamy
Web Desk | news18
Updated: February 11, 2019, 11:20 AM IST
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்ட திட்டம் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 5 அல்லது 6 ஆண்டுகளில் பணிகள் அனைத்தும் முடிவடையும் என்று கூறப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அனைத்து வழித்தடங்களும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

அடிக்கல் நாட்டப்படும் போது, இதற்கான செலவு 14, 600 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. இந்த திட்ட செலவு, தற்போது 20, 000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்டத்தில், வண்ணாரப்பேட்டை தொடங்கி விமான நிலையம் வரை ஒரு வழித்தடமாகவும், சென்னை சென்ட்ரல் தொடங்கி பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. முதல் வழித்தடத்தில் சுமார் 14 கி.மீ தொலைவிற்கும் இரண்டாம் வழித்தடத்தில் சுமார் 10கி.மீ தொலைவிற்கும் மெட்ரோ ரயில் பூமிக்கு அடியில் பயணிக்கிறது.

முதல் கட்ட திட்டத்தின் 45கி.மீ தொலைவு, கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு பகுதியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது அந்த வகையில், இறுதியாக பணி முடிவுற்ற வண்ணாரப்பேட்டை முதல் டிஎம்எஸ் வரையிலான வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்ததன் மூலம் அனைத்து வழித்தடங்களும் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையிலான வழித்தடத்தில் அதிகபட்ச கட்டணம் 60 ரூபாய் எனவும், சென்ட்ரல் முதல் விமான நிலையம் இடையிலான கட்டணம் 50 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு வழித்தடங்களிலும் நேற்று முதல் சோதனை ஒட்டம் நடத்தி வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், நேற்று தொடங்கி இன்று இரவு வரை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளை துவங்க 50 சதவீத நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று பிரதமரிடம் நேரில் அளித்த கடிதத்தில், இரண்டாம் கட்ட பணிகளை துவங்க உரிய அனுமதியை துரிதமாக வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டக்கொண்டுள்ளார்.

Also see...

சென்னை 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு விரைவில் அனுமதி .
First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...