ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்!

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்!

பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

  பிரதமர் நரேந்திர மோடியை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும், தமிழகத்தின் நலன்சார்ந்த திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல திட்டங்களுக்கு பிரதமரிடம் மனுவை வழங்கினார்.

  அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதை தெரிவித்தார்.

  அதன்பின் எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டை நினைவு கூரும் விதமாக, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் ரெயில் நிலையம் என பெயர் சூட்டவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டள்ளது. அதையும் நிறைவேற்றித் தரவேண்டும் என பிரதமரிடம் கூறியதை தெரிவித்தார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Bharat rathna., Cm edappadi palanisamy, Jayalalithaa, PMModi