ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் - முதல்வர் வலியுறுத்தல்
”முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்கும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்”

முதலமைச்சர் பழனிசாமி
- News18
- Last Updated: November 7, 2019, 4:24 PM IST
ஐ.டி. துறையில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், 18-வது சர்வதேச தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இதனை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழகம் முன்னிலை வகித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்கும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் நிதி நிர்வாகத்தை காரணம் காட்டி, ஐ.டி.நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் இக்கருத்தரங்கில் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
Also see...
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், 18-வது சர்வதேச தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இதனை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழகம் முன்னிலை வகித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் நிதி நிர்வாகத்தை காரணம் காட்டி, ஐ.டி.நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் இக்கருத்தரங்கில் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
Also see...