கொலைசெய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிதி: முதலமைச்சர் அறிவிப்பு

ராஜா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

Web Desk | news18
Updated: August 16, 2019, 6:59 PM IST
கொலைசெய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிதி: முதலமைச்சர் அறிவிப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Web Desk | news18
Updated: August 16, 2019, 6:59 PM IST
கிருஷ்ணகிரி அருகே அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் உயிரிழந்த டாஸ்மாக் விற்பனையாளர் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கடந்த 14-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுசாலை கிராமம் ஆவல்நத்தம் கூட்டு ரோடு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதில் ராஜா என்ற விற்பனையாளர் உயிரிழந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், உயிரிழந்த ராஜாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ராஜாவின் மனைவிக்கு அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையத்தில் பணி வழங்க ஆணையிட்டுள்ள முதலமைச்சர், ராஜா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையை அறிவுறுத்தியுள்ளார்.

முதலமைச்சரின் இந்த நடவடிக்கையை அடுத்து, டாஸ்மாக் ஊழியர்களின் கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Loading...

Also see...

First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...