அன்பும் ஒற்றுமையும் மேலோங்கிடும் சமுதாயத்தை படைக்க அனைவரும் உறுதியேற்போம் என்று ஈஸ்டர் தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்து மரிக்கும் நாள் புனித வெள்ளியாகவும் அவர் உயிர்த்தெழும் நாள் ஈஸ்டர் தினமாகவும் கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி, ஈஸ்டர் தினமான இன்று கிறிஸ்தவர்கள் நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சென்னையில் சாந்தோம், பெசண்ட் நகர், சின்னமலை உள்ளிட்ட பகுதியில் உள்ள தேவாலயங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாளையொட்டி ஏசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இதையும் படிங்க - வேளாங்கண்ணி உட்பட தமிழகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை
ஈஸ்டர் தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது-
இதையும் படிங்க - ''அரசியலுக்கு அப்பாற்பட்டவர் இளையராஜா; சர்ச்சைகள் வேண்டாம்'' - டிடிவி தினகரன் கருத்து
”கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமானின் அடியொற்றி நடந்திரும் கிறித்தவ பெரு மக்களுக்கு ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு பெருவிழா நல்வாழ்த்துகள்!
கருணையின் அடையாளமாகவும் மனித சமுதாயம் பேற்றும் மாசற்ற புனிதராகவும் திகழும் இயேசு பெருமானை போற்றும் இன்னாளில் வேற்றுமைகளும், வெறுப்பும் நீங்கி அன்பும் ஒற்றுமையும் மேலோங்கிடும் சமுதாயத்தை படைக்க அனைவரும் உறுதியேற்போம்!”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.