Home /News /tamil-nadu /

பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

இந்த சிகரெட் லைட்டர்கள் ரூ.10க்கு கிடைப்பது 20 தீப்பெட்டிகளுக்கு மாற்றாக இருக்கும். இருப்பினும், அவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுகிறது- மு.க ஸ்டாலின்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதார அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் சிகரெட்ர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல்-க்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், தீப்பெட்டி உற்பத்தித் தொழில் தமிழ்நாட்டின் தென்பகுதியில் வேலைவாய்ப்பிற்கான முக்கிய ஆதாரமாக விளங்குவதுடன் அப்பகுதியில் ஒரு பாரம்பரியத் தொழிலாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்தொழிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர் என்றும், அப்பணியாளர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், விவசாயம் செய்ய இயலாத  வறண்ட பகுதியில் பொருளதார வளர்ச்சியின் ஆதாரமாக இத்தொழில் விளங்குவதாகவும், தற்போது தொழில் துறை மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில் ஏற்றுமதி சந்தையில் பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் இருந்து கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், கொரோனா பெருந்தொற்றினைத் தொடர்ந்து ஏற்பட்ட விநியோக சங்கிலி இடையூறகள்,  ஏற்றுமதி தொடர்புடைய செலவீனம் மற்றும் நடைமுறை சிரமங்கள் மேலும் அதிகரித்துள்ளதாகவும், உள்ளீட்டு செலவுகளும் பெருமளவு அதிகரித்துள்ளதையும் தனது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் வாசிக்க: எலிசபெத் மகாராணியின் 500 மில்லியன் டாலர் சொத்து யாருக்கு?

    மேலும், சீனா போன்ற நாடுகளில் இருந்து சட்டப்படியாகவும் சட்டவிரோதமாகவும் இறக்குமதி செய்யப்படும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் வரவால் தீப்பெட்டித் தொழிலின் உள்நாட்டு சந்தை வாய்ப்பு வேகமாக குறைந்து வருவதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளாகினர்.

    இந்த சிகரெட் லைட்டர்கள் ரூ.10க்கு கிடைப்பது 20 தீப்பெட்டிகளுக்கு மாற்றாக இருக்கும். இருப்பினும், அவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுவதுடன், அதில் பயன்படுத்தும் "எரிபொருளின் சுகாதார தாக்கம் இன்னும் அறியப்படவில்லை என்றும், இவ்வெளிநாட்டு சிகரெட் லைட்டர்கள் தொடர்ந்து சந்தையைக் கைப்பற்றினால், தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டிலுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்று தனது  கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் வாசிக்க: எலிசபெத் மகாராணியின் 500 மில்லியன் டாலர் சொத்து யாருக்கு?

    எனவே, இந்த விசயத்தில் ஒன்றிய அமைச்சர்  உடனடியாகத் தலையிட்டு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியைத் தடை செய்யுமாறும், சட்டவிரோத இறக்குமதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: CM MK Stalin

    அடுத்த செய்தி