முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சிறையேகி, உயிரீந்து தமிழ்நிலம் காத்த தியாகம் வாழ்க! - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

சிறையேகி, உயிரீந்து தமிழ்நிலம் காத்த தியாகம் வாழ்க! - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்

நவம்பர் 1ம் நாள் எல்லைக் காவலர்களின் இணையற்ற தியாகத்தைப் போற்றி நன்றி செலுத்தும் நாள் - மு.க ஸ்டாலின்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

1956-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் நாள், இந்தியா முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் சில பகுதிகள் பிரிந்து சென்றன. அந்த வகையில், மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட நவம்பர் 1ம் நாளை தமிழ்நாடு நாளாக கடந்த 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

1956ல், இப்போதையை தமிழ்நாடு நிலப்பரப்பு   'மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்பட்டது. 1968ம் ஆண்டு ஜுலை 18ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் தீர்மானம் சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு’ எனப் பெயரிடப்பட்டஜுலை 18ம் நாளை `தமிழ்நாடு நாள்’  என்றும், நவம்பர் 1ம் தேதி நாளை  எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் என்றும் கடந்தாண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதையும் வாசிக்கதமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளே தமிழ்நாடு நாள்: ராமதாஸ்

அந்தவகையில், 'எல்லைப் போராட்ட தியாகிகள் நாள்' இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லைப்போராட்ட தியாகிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் நன்றி செலுத்தியுள்ளார்.

இதையும் வாசிக்க: இனி தமிழ்மொழியில் மருத்துவ பாடப் புத்தகங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன குட்நியூஸ்!

இது குறித்து, ட்விட்டர் குறிப்பில் அவர்  கூறியிருப்பதாவது, நவம்பர்-1: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் இழந்த தமிழர் வாழும் பகுதிகளை, தமிழகத்தோடு மீண்டும் இணைக்கப் போராடிய எல்லைக் காவலர்களின் இணையற்ற தியாகத்தைப் போற்றி நன்றி செலுத்தும் நாள். சிறையேகி, உயிரீந்து தமிழ்நிலம் காத்த தியாகம் வாழ்க என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, MK Stalin